கிழக்கு நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் இந்த எபோலா வைரஸ், இலங்கைக்குள் வரும் சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாகவும் அதனை தடுக்க துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விசேட மருத்துவர் திபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினர், அங்கு சுற்றுலா சென்ற இலங்கையர்கள், அங்கு தொழில் புரிந்து வருபவர்கள் நாட்டுக்கு திரும்பி வரும் போது, அந்த வைரஸ் இலங்கைக்குள் பரவக் கூடும்.
இந்த வைரஸ் நோய் பரவுவதை தடுக்க அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் அன்டிபயோடிக் மருந்தை கண்டுப்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக விரைவில் இந்த நோய் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு விடும் எனவும் திபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.