முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதனை தவிர 10 வீதமான முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாகவும் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காவிட்டாலும் இந்த வாக்குகள் மூலம் பெற்றி பெறவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எம்மை பழிவாங்கும் விதத்திலேயே முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர்.
வெலிகம சஹிரா கல்லூரியில் ஆயிரத்து 300 முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கவிருந்ததுடன் அந்த முழு வாக்குகளும் பிற்பகல் ஒரு மணிக்கு முன்னர் அளிக்கப்பட்டு விட்டன. அனைவரும் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களித்திருந்தனர்.
இலங்கை முழுவதுமான முஸ்லிம் மக்களின் 3 சத வீத வாக்குகள் மாத்திரமே எமக்கு கிடைத்தன.
எமக்கு பாடத்தை கற்பிக்க முஸ்லிம் மக்கள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தனர். இதனால், நாங்கள் தயாரித்த அனைத்து புள்ளி விபரங்களும் வீணானது எனவும் டளஸ் அழகபெரும் குறிப்பிட்டுள்ளார்.