கொழும்பு மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்பு இம்முறை நடைபெறவுள்ள மேல்மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளதுடன் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீனை பலப்படுத்துவதற்கு முன்வந்துள்ளனர்.
அத்துடன் பெண்கள் அமைப்பு கொழும்பு மாவட்டத்தில் சகல பிரதேசங்களிலும் அகில இலங்கை மக்கள் காங்கிஷஸ் கட்சிக்கு ஆதரவு தேடி தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் பல்வேறு ஆதரவுக்கூட்டங்களை நடத்தி வருவதுடன் தனிப்பட்ட ரீதியில் வீடுவீடாகச் சேன்று ஆதரவுகளையும் திரட்டி வருகின்றனர்.
இவ்வமைப்பு மிகவும் பலமான அமைப்பாக இருப்பதால் அகில இலங்கை மக்கள் காங்கிஸை இம்முறை தேர்தலில் வெல்ல வைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்று நேற்று மாலை வெல்லம்பிட்டி பொல்வத்த பிரதேசத்தில் நடைபெற்றபோது அதில் அதில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
Comments are closed.