Breaking
Fri. Nov 15th, 2024

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் பல்­வேறு அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்கும் தரு­ணத்தில் அதனை சீர்­கு­லைத்து எமது கட்­சி­யின்­பெ­ய­ருக்கு பங்கம் விளை­விக்கும் வகை­யில் செயற்­படும் பிரி­வினர் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. எமது பொறு­மைக்கும் ஒரு எல்லை உள்­ளது என்று அமைச்சர் கபிர்­ஹாஷிம் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

தேசிய அர­சாங்­கத்தின் ஒரு­மித்த செயற்­பா­டுகள் மூல­மாக மக்­க­ளுக்கு பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைச்­சர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­கள் ­தொ­டர்­பில்­ ஒரு சிலர் ­போ­லி­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தோடு யானையின் பெய­ருக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் முயற்­சி­ மேற்­கொள்­கின்­றனர். நாம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் ­பொ­று­மை­யாக இருந்­துள்ளோம். எமது பொறு­மைக்கும் ஒரு எல்லை உண்டு என்­ப­தனை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகிய பிர­தான இரண்டு கட்­சி­கள்­ ஒன்­றி­ணைந்து உரு­வாக்­கி­யுள்ள தேசிய அர­சாங்­கத்தின் கீழ் மக்­க­ளுக்­கான பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த பயணத்தை எவராலும்தடுத்து நிறுத்த முடியாது என்­றார்.

By

Related Post