Breaking
Mon. Dec 23rd, 2024

–    இர்ஷாத் றஹ்மத்துல்லா –

எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம் செய்த அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தற்போது காணப்படும் அரசியல் சூழலில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி தொடர்பிலும்,ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் இம்மக்களுக்கு அமைச்சர் விளக்கப்படுத்தினார்.அதே வேளை மீள்குடியேற்றத்தின் சவால்கள் அதனை வெற்றிக் கொள்ள கடந்த காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் என்பன பற்றியும் இம்மக்களுக்கு அமைச்சரினால் விளக்கமளிக்கப்பட்டது.

அதே வேளை இந்திய வீடமைப்பு திட்டத்திற்குள் முஸ்லிம் மக்களின் கனிசமானவர்கன் உள்ளீரக்கப்படாமை தொடர்பில் பொது மக்கள் அமைச்சரிடத்தில் முறையிட்டனர்.இது தொடர்பிலும் அமைச்சர் இங்கு கருத்த தெரிவித்தார்.

இந்த திட்டம் இலங்கையில் நடை முறைப்படுத்த இந்திய-இலங்கை அரசு செய்த ஒப்பந்தம் தொடர்பிலும்,அதன் போது தான் தனது சமூகம் தொடர்பில் கொடுத்த அளுத்தம் குறித்தும் தமதுரையின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முசலி பிரதேச சபை தலைவர் எஹியான் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

Related Post