Breaking
Sat. Jan 11th, 2025

பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை பெறு­வ­தற்­கான பெரும்­பான்மை பலம் எங்­க­ளி­டமே இருக்­கின்­றது. எனவே, எதிர்­வரும் ஏழாம் திகதி சபா­நா­யகர் வெளி­யிடும் அறி­விப்­புக்­காக நாங்கள் காத்­தி­ருக்­கின்றோம் என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

பெரும்­பான்மை பல­மில்­லாத ஒரு­வரை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சபா­நா­யகர் அறி­விக்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் விவ­காரம் குறித்து குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் எதிர்க்­கட்சி தலை­வ­ராக உள்ள நிமால் சிறி­பால டி. சில்வா அந்த பத­வியை வகிக்க முடி­யாது என்று கூறப்­பட்­டு­வ­ரு­கின்­றது. இதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியி்ன் தலைவர் தினேஷ் குண­வர்த்­த­னவை நிய­மிக்­க­வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்,பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி தற்­போது மிகப்­பெ­ரிய விவ­கா­ர­மாக எழுந்­துள்­ளது. இந்­நி­லையில் என்னை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்­கும்­படி சிலர் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

என்னை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சபா­நா­யகர் அறி­வித்தால் அதற்­கான செயற்­பா­டு­களை மேற்­கொள்­ளவும் அந்த வகி­பா­கத்தை வகிக்­கவும் நான் தயா­ராக இருக்­கின்றேன்.

இதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­மந்­தனை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக அறி­விக்க முடி­யாது. காரணம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேசிய நிறை­வேற்று சபையில் அங்கம் வகிக்­கின்­றது. எனவே கூட்­ட­மைப்பின் தலைவர் எதிர்க்­கட்சித் தலை­ர­வாக வர முடி­யாது.

மேலும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் பங்­கெ­டுத்­தி­ருந்­தாலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஏனைய பங்­காளிக் கட்­சிகள் எதுவும் இணைந்­து­கொள்­ள­வில்லை.
எனவே எமக்கே பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை பெறு­வ­தற்­கான பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே எதிர்வரும் ஏழாம் திகதி சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். பெரும்பான்மை பலமில்லாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவிக்க முடியாது என்றார்.

-VK-

Related Post