எம்பிலிபிட்டியில் அண்மையில் இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளில் தாம் எவ்வித தலையீடுகளையும் செய்யவில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் எம்பிலிபிட்டியில் பொலிஸாருக்கும் பிரதேசத்தில் விருந்துபசாரமொன்றை நடத்திக்கொண்டிருந்த கும்பலுக்கும் இடையிலான மோதலில் சுமித் பிரசன்ன என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்திருந்தார்.
விசாரணைகளில் தலையீடு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற நீதியான முறையில் விசாரணை நடாத்த பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அடுத்த கட்ட நடடிக்கை எடுப்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் குற்றம் இழைத்திருந்தால் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.