இந்த ஜனாதிபதியினையும்,எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும்,கட்சிகளிடமும் கேட்கின்றோம்,துன்பத்தால்,அழிவால்,கஷ்டத்தால்,பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இம்மக்களை காப்பதற்கு என்ன திட்டம் இருக்கின்றது என தெரிவிக்க முடியுமா கேள்விழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்மற்றும் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அப்பாவி மக்கள் மத்தியில் சென்று இனவாதம்,மதவாதம் பேசி அவர்களை மீண்டுமொரு போருக்கு அழைப்புவிடுத்து அவர்களது வாழ்க்கையினை இல்லாமல் ஆக்கும் அநியாயத்தை எமது மண்ணில் செய்யாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐனாதிபதி தலைமயிலான தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது விளையாட்டு மைதனத்தில் புதன்கிழமை மாலை (2013.09.11) இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது –
இந்த மாவட்டமானது யுத்தத்தால் பாரிய பின்னடைவுகளையும்,அழிவுகளையும் கண்ட மாவட்டமாகும்.இங்கு வாழ்ந்த மக்கள் உள்நாட்டு யுத்தம் காணமாக இடம் பெயர்ந்து நாட்டுக்குள்ளும்,இந்தியாவுக்கும் அகதிகளாக சென்ற அவல வாழ்க்கையினை வாழந்த மக்கள்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக வந்ததன் பிற்பாடு தான் எங்களுக்கு சமாதானத்தை பெற்றுத் தந்தார்.அந்த சமாதானத்தின் பரிசு தான்.இதனது விளைவு தான் எமது மண்ணிலே நாங்கள் அச்சமில்லாமல் ஒற்றுமையாக வாழக் கூடியதொரு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு காலம் இருந்தது இவ்வாறானதொரு தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் வெற்றி பெரும் வரை உயிருடன் வாழ முடியுமா ?என்ற பயம் இருந்தது,இவ்வாறான நிலையில் வாழ்ந்த எமக்கு இன்று தேர்தலை தைரியமாக முகம் கொடுக்கும் சந்தரப்பத்தை இந்த அரசு எமக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.எமது மாவட்டத்தில் அழிந்து போன எத்தனையோ பாடசாலை கட்டிடங்கள்,பொது கட்டிடங்கள்,மத தளங்கள்,பாதைகள்,புகையிரதப் பாதைகள் என்று அனைத்தும் புனர் நிர்மானம்,மற்றும் புதிய கட்டிடங்காளக மாறிவருகின்றது.
இவ்வாறானதொரு சூழிலி்ல் தான் நாங்கள் வாழந்து கொண்டிருக்கின்றோம்.மூன்றிலரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள இந்த அரசாங்கத்துடன் சேர்ந்துசெல்கின்ற போது தான் இந்த மாவட்டத்தையும்,ஏழை மக்களுக்கும் எம்மால் உதவி செய்ய முடியும்.கடந்த கால தேர்தல்களில் இந்த மக்களுடன் வந்து நாங்கள் பேசினோம்.அன்று எம்மை ஏற்றுக் கொண்டவர்கள் ஜனாதிபதியினை வெற்றிபெறச் செய்தார்கள்.
அவர்கள் இந்த மாவட்டத்தினது பங்குதாரிகளாகவும் உள்ளனர்.
யுத்தத்துக்கு பலிகொடுத்த எமது எத்தனை சகோதரர்களை நாங்கள் கடந்த 20 வருட காலமாக கண்டுவந்துள்ளோம்.கைகளை,,கால்களை இழந்து வேதனைப்டும் எத்தனையோ சகோதர,சகோதரிகளை நாங்கள் இன்று கண்டோம்.நாங்கள் பேரளிகள் என்று மார்தட்டி களத்தில் நின்றோம்.ஆனால் துரதிஷ்டம் இந்த இழப்புக்களுக்கு எல்லாம் தீனி போட்டு வளர்த்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிள்ளைகளும்,குடும்பங்களும் வெளிநாடுகளில் கல்வி கற்பதுடன்,நிரந்தர வதிவிட உரித்தினை பெற்று வாழ்கின்றனர்.
இன்று கட்சியொன்று இங்கு வந்து இல்லாத பொல்லாதவற்றையும் சோடித்து அந்தச் சந்தி,இந்தச் சந்திகளில் அழுது புலம்புகின்றனர்.முஸ்லிம்களுக்கு எதிராகசில இனவாதிகள் செயற்படுகின்றனர்.அவர்கள் குறித்து அமைச்சரவை கூட்டங்களில் எதையும் பேசாமல் ஐனாதிபதிக்கு முன்பாக கூணி குறுகி நின்றுவிட்டு வெளியில் வந்தததும் வீராப்பு பேசும் அரசியல் வாதிகள் குறித்து இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதியிடம் நீங்கள் கேட்கலாம்.
இந்த ஜனாதிபதி அவர்கள் பள்ளிகளை உடைப்பவர் அல்ல,ஆனால் பள்ளிகளை உடைக்கும் இனவாதிகள் இருக்கின்றார்கள்,பள்ளிகளை இந்த மஹிந்த ராஜபக்ஷ தான் உடைக்கின்றார்கள் என்று அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டு தேர்தலில் தனித்து போட்டியிடும் அந்த முஸ்லிம் கட்சியின் தலைவர் கூவித்திரிகின்றார் என்றால் இது வேடிக்கையில்லையா?,பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்ற அதனைபார்த்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பவர்கள் நாங்கள் அல்ல.
அதனை ரவூப் ஹக்கீமை விட நுாறு வீதம் முன்னின்று கண்டிப்பவர்கள் நாங்கள் என்பதை தெளிவாக கூறி வைக்கவிரும்புகின்றேன்.ரவூப் ஹக்கீமுக்கு கொள்கை கிடையாது தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்யவே,இந்த வாக்குகளை பிரித்து அந்த கைங்கரியத்தை செய்கின்றார்.அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக இந்த சதிகளை செய்து கொண்டிருக்கமால் துணிவிருந்தால் பதவிகளை துறந்து தேர்தலில் போட்டியிடட்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அறை கூவல் விடுத்தார்.