Breaking
Sat. Dec 28th, 2024

-ஊடகப்பிரிவு-

குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெகுணுகொல்ல வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்  எம்.சி.இர்பான் ஆசிரியரை ஆதரித்து  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூரியதாவது,

கடந்த காலங்களில்  இவர் அபிவிருத்தி மற்றும் சமூக பணிகளில் கூடிய கவனம் செலுத்தி வருவதுடன், கெகுணுகொல்ல வட்டாரத்தில் மட்டுமன்றி சியம்பலாகஸ்கொடுவ,பொதுஹர போன்ற வட்டாரங்களிலும் சகோதரர் இர்பான் பல சேவைகளை செய்துள்ளார்.

மேலும், பிரதேசத்தின் பல பாதைகளையும் மக்களுக்கான சுய தொழில் முயற்சிக்கான பல உதவிகளையும் இன, மத, வேறுபாடின்றி செய்து வரும் சகோதரர் இர்பான், இப்பிரதேச மக்களின் மனம் வென்றவர்.

அத்துடன், இர்பான் அவர்களை இம்முறை எதிர் கொண்டிருக்கும் தேர்தலானது பாரிய வெற்றியினை பெற்றுக் கொடுக்கும் என்பதினை, பிரதேச வாசிகளின் உத்தேச கணிப்பீடு வெளிக்காட்டுகின்றது,

எனவே, சகோதரர் இர்பான் அவர்களை குளியாப்பிட்டிய பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்படுவதற்கு எமது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post