Breaking
Mon. Dec 23rd, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது கொல்லப்பட்ட தி.மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், த.மு. தஸநாயக்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் கொலைச்சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழேயே இந்தக் குழுவை அமைத்து, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் மற்றும் பொலிஸ் விசாரணை தொடர்பிலான முன்னேற்றம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கே, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.  நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோதே அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள், மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தமையினால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்கொண்டுவருவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்பதையிட்டே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post