அலியார்
கடந்த சில வாரங்களாக ஆங்கில ஊடகங்களில் மிக மோசமாக பேசப்பட்டு வருகின்ற மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி போன்ற கிராமங்களில் மீள்குடியேறிய மக்களை விரட்டும் முகமாக முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழித்து நாசஞ் செய்வதாக பொதுபலசேன, பிக்குகள் முன்னணி, சிஹல ராவய, அபேஜாதிக, பெரமுன போன்ற இன்னும் சில அரச சார்பாற்ற நிறுவனகளும் அப்பட்டமானபொய்ப் பிரச்சாரத்தையும் குற்றச்சாட்டையும்மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
இவர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளை அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்களுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதோடு மட்டுமல்லாதுஇந்த மக்களை வெளியேற்றக் கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி ஊடகங்கள் மூலமாக சிங்கள மக்கள் மத்தியில் எமது நியாயமான மீள்குடியேற்றத்திற்கு எதிராக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
முஸ்லிம்கள் காடுகளை அழித்து, வன விலங்குகளை கொன்று, காணிகளை அபகரித்து வில்பத்து கல்லாறு வன வளத்துக்குள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வடக்கு முஸ்லீம்களை மீள்குடியேற்றி வருகின்றார் என்று பொய்யை பரப்பிசிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு கலவரத்தை தூண்ட சதி செய்து வருகின்றனர்.
இந்த அத்தனை பொய்யையும் பரப்புகின்ற இதற்கு தலைமைத்துவம் வழங்கி வருகின்ற சிரேஸ்ட சூழலியலாளர்(environmentalist)சஜீவ சமிக்காரஅவர்கள் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதாவது இந்த மக்களின் மீள்குடியேற்றம் நியாயமானதா? அதனை எவராவது பகிரங்கமாக நிரூபிக்க முடியுமா?? என்பதாகும்..
எனவே, இந்த சவாலை ஏற்று நமது சமூகத்தின் மீள்குடியேற்றத்தை நியாயப்படுத்தியும் வடக்கு முஸ்லீம்களாகிய நாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தாயக மண்ணை பாதுகாப்பதற்காகவும் இன்று இரவு வியாழக்கிழமை 21-05-2015ஹிரு டீவியில் பத்து மணி தொடக்கம் பன்னிரண்டு மணிவரை விவாதம் நடைபெற உள்ளது.
நமது சமூகத்திற்காகவும், நமது சமூகத்தின் 25 வருடகால அகதி வாழ்கையின் விடிவு கிடைப்பதற்காகவும் இன்றைய இந்த விவாத நிகழ்ச்சியில் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தவும் சிங்கள சமூகம் எம் மீது கொண்டுள்ள சந்தேகங்களை களைந்துகொள்ளவும் எம் மக்களுக்கு வெற்றிகிடைக்கவும் அனைவரும் அல்லாஹ் விடத்தில் விசேட பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகிறோம்.