மரணத்தை ஏற்படுத்தும் எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற கொழும்பு நாலந்தா கல்லூரியின் ரகித்த தில்ஷான் மாலேவன மாணவன் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அம்மாணவனுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அவருடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிக்கூறிய ஜனாதிபதி அவர்கள் அதற்காக எந்த நேரத்திலும் அரச அனுசரணையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவூம் தெரிவித்தார்.
அண்மையில் இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான ஆய்வாளர்களின் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்ட தில்ஷான் மாலேவன மாணவன் நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எயிட்ஸ் நோய்த் தடுப்புக்காக தயாரித்த மூலிகை விஞ்ஞானிகளின் பெரும் கவனத்திற்கும் பாராட்டுக்கும் உள்ளாகியது.
போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற நான்கு தங்கப் பதக்கங்களில் இரண்டு தங்கப் பதக்கங்களை ரகித்த தில்ஷானுடன் இன்னுமொரு இலங்கை மாணவன் தமதாக்கிக்கொண்டனர்.
ஜனாதிபதி அவர்களை சந்தித்தபோது இம்மூலிகை தொடர்பாக ஆய்வூகளை மேம்படுத்திக்கொள்வதற்கு வெளிநாடுகளுக்கு கல்விக்காக செல்லாமல் கொத்தாலாவெல பாதுகாப்பு பீடத்தில் அனுமதி பெற்று மேலதிக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தில்ஷான் மாணவன் தெரிவித்தார்.