எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போதே, இந்த வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளிலும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே கூறியுள்ளார்.
இதன்படி உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த வருடம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.