Breaking
Fri. Jan 10th, 2025

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப் போவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ள மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, நாட்டில் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, எரிபொருள்களின் விலையை அதிகரிப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதற்கு ஒரு போது இடமளிக்கப்படமாட்டாது என்றும் அது அறிவித்துள்ளது.

எரிபொருள் மாபியாக்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் போலியான பிரசாரங்களை நம்பவேண்டாம் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

Related Post