Breaking
Mon. Dec 23rd, 2024
எரிபொருள் விலை தொடர்பில் திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார்.
உலக பொருளாதார நிலை, எமது பொருளாதாரத் திட்டங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இது தொடர்பில் ஆராய வேண்டுமென குறிப்பிட்ட அவர் எரிபொருள் விலை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உலகில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமையின் அடிப்படையில் எரிபொருள் விலை தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், எரிபொருள் விலைகள் குறைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு விலை அதிகரிக்கும் எனக் கருதவில்லை எனவும், மத்திய கிழக்கிலிருந்து எமக்கு கிடைக்கும் நிதி குறைவடையலாம் எனவும், ஐரோப்பிய வலயத்தில் எதிர்பார்த்தளவு பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடனும் பேச்சு நடத்தி  தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எரிபொருள் விலை தொடர்பில் சபையில் அறிவிப்பு வெளியிடப்படுமெனவும் அவர் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post