Breaking
Mon. Dec 23rd, 2024

– ஏ.எஸ்.எம்.ஜாவித் –

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் நாங்கள் மீண்டும் எழுவோம் எனும் தொணிப் பொருளிலான ஒன்று கூடல் ஒன்றினை கல்லூரியின் அதிபர் மற்றும் பழையமாணவர்களின் சங்கமும் இணைந்து எதிர் வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள பி அறையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கௌரவ அதிதியாக வடமாகாண சபை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து கொள்ளும் நிகழ்வில் விஷேட பேச்சாளராக ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் ஏ.சி.அகார் முஹமட் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் சுங்க அதிகாரி லுக்மான் சகாப்தீன் தெரிவிக்கின்றார்.

இந்நிகழ்வு யுத்தத்திற்குப் பின்னரான சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் முதல் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் இதன்போது கல்லூரியின் அபிவிருத்தி, முன்னோற்றம் மற்றும் அதனை மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்பி கல்லூரியின் கல்வித்தரத்தினை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் பழைய மாணவர்களிடமிருந்து பெறப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post