Breaking
Wed. Dec 25th, 2024

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் அவர்களது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்குளம் பிட்டி கிராமத்திற்கான அதி நவீன பாதை மற்றும் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இவ் வேலைத்திட்டங்களை கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியேக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களிடம் இவை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டார் மேலும் இவ் வீதியின் ஆரம்ப வேலை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது

Related Post