Breaking
Fri. Jan 3rd, 2025
– Mohamed Basir –
துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் இன்று 21-07-2016 அல்-ஜஸீராவுக்கு அளித்த விறுவிறுப்பான நேர்காணலின் சுருக்கம் இது.
• கடந்த வெள்ளி 15 ஆம் திகதி மர்மரைஸ் ஹொட்டலில் நான் இருந்தேன். அப்போதுதான் புரட்சிக்கான சதிமுயற்சி குறித்து எனக்கு தெரியவந்தது.
• புரட்சி இரவன்று துருக்கி மக்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் என்னுள் இருந்தது.
• ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வீதிகளுக்கு இறங்குமாறு மக்களுக்கு நான் விடுத்த அழைப்புக்கு மக்கள் உடனடியாக பதிலளித்தனர்.
• புரட்சி குறித்த முதலாவது செய்தியை எனது மருமகனிடமிருந்து நான் பெற்றேன்.
• புரட்சிக்கான முயற்சியை அறிந்த போது மர்மரைஸிலிருந்து தாலான் போய் அங்கிருந்து இஸ்தான்பூல் போனேன்.
• புரட்சி சதிமுயற்சியின் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
• புரட்சிக்கு சவால்விடுவதில் முன்னைய அனுபவங்களிலிருந்து பயனடைந்தோம்.
• புரட்சியில் இறங்கியவர்களின் எண்ணிக்கை பற்றி அறியமுடியவில்லை. எனினும் அவர்களில் சிறுதொகையினர் கோலன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
• புரட்சியை எதிர்கொள்வதற்கான வழிவகைகளை ஆராயுமாறு தேசிய புலனாய்வுத்துறை ஆலோசகருடன் நான் பேசினேன்.
• மக்கள் நாட்டை பாதுகாத்துள்ளனர். அவர்கள் வீதிகளில் யுத்த டாங்கிகளுக்கு சவால் விடுவதில் வென்றனர்.
• கோலனின் இயக்கம் ஊடுருவல் செய்யும் அளவுக்கு புலனாய்வுத் துறையில் ஓட்டைகள் இருக்கலாம்.
• கோலன் பயங்கரவாத இயக்கமே இப்புரட்சியை மேற்கொண்டிருக்கிறது.
• புரட்சியை அழிப்பது இறுதியானதாக இருக்காது. வேறு சதித்திட்டங்கள் அங்கு இருக்கலாம்.
• புலனாய்வுப் பிரிவும் நீதித்துறையும் கோலன் பயங்கரவாத இயக்கத்தின் இயல்பு குறித்த ஆதாரங்களை முன்வைத்திருக்கின்றன.
• இதுவரை மொத்தமாக 9004 பேர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
• புரட்சியை மேற்கொண்டவர்களுக்கு கோலனுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
• புரட்சி முயற்சி ஒரு தேசத்துரோகம் என்று பார்ப்பது அவசியம். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
• பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் இராணுவப் புரட்சியின் பின்னணியிலான கைதுகளை விமர்சிப்பதில் தவறிழைத்துள்ளார்.
• புரட்சிக்கு சவால்விடுவது என்பதன் கருத்து கோலனின் இயக்கத்தை அழிப்பது என்பதல்ல.
• சட்டத்தினடிப்படையில் எம்முடைய அனைத்து பணிகளையும் நாம் முன்னெடுப்போம்.
• 200 இற்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் சிலர் யுத்த டாங்கிகளால் நசுக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.
• உலகத்தின் மிகச் சிறந்த உளவுப்பிரிவுகளில் கூட பலவீனம் இருப்பதை காண்கிறோம். அமெரிக்கா, பெல்ஜியம்.. போன்ற நாடுகளில் இதனை அவதானித்திருக்கிறோம்.
• எமது நாட்டின் பிரச்சினையை ஆராய்வதற்காக அனைத்து தரப்பினருடனும் ஒன்று சேர்வதையிட்டு நான் பெருமையடைகிறேன்.
• ரஷ்ய விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவிமானிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதித்துறை கண்டுபிடிக்கலாம்.
• புரட்சியில் கோலனின் பங்கு குறித்த எமது ஆதாரங்களை அமெரிக்காவுக்கு நாம் வழங்கியுள்ளோம்.
• ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமையுடன் புரட்சியாளர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பது குறித்து இதுவரை எம்மிடம் தகவல்கள் இல்லை.
• புரட்சியாளர்கள் பத்ஹூல்லாஹ் கோலனை கடவுள் அந்தஸ்த்தில் வைத்து நோக்குகின்றனர்.
• புரட்சிக்கான சதிமுயற்சியை எதிர்கொள்வதில் எமக்கு ஆதரவளிப்பதாக நேட்டோ தெரிவித்திருக்கிறது.
• தூக்குத் தண்டனையை மீளக் கொண்டுவருவதற்கு மக்கள் விரும்புகின்றனர். பாராளுமன்றத்தின் தீர்மானத்திற்காக காத்திருக்கிறோம்.
• துாக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு பாராளுமன்றம் தீர்மானம் எடுத்தால் அதனை உடடினடியாக நான் நடைமுறைப்படுத்துவேன்.
• ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட தலைவரை சதிப்புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய ஸீஸிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பகளும் கிடையாது.
• சிரியாவும் எகிப்தும் ஜனநாயகத்திற்காய் ஏங்கித் தவிக்கின்றன.
• புரட்சிக்குழு புரட்சியின் சூத்திரதாரியின் திட்டத்திற்கு ஏற்பவே நடந்து கொண்டுள்ளது.
• துருக்கியில் எந்தவொரு ஊடகத்திற்கும் நான் சவால் விட்டதில்லை.
• என்னையும் எனது குடும்பத்தைப் பற்றியும் விமர்சிக்கும் சென்னல்கள் கூட புரட்சிக்கு எதிராகவே நின்றன.
• சில ஊடகங்கள் சொல்வது போன்று புரட்சி நாளன்று நான் நாட்டை விட்டு செல்லவில்லை.
• துருக்கியின் ஆயுதப்படையைச் சேர்ந்த மோசடிக்கார குழுவொன்று நாட்டின் ஆயுதங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு குண்டுவீசியிருக்கிறது. பல நிரபராதிகளை கொன்றிருக்கிறது.
• பயங்கரவாத அமைப்பு என்பதற்கு மேலால் இப்புரட்சிக்கு ஒரு சூத்திரதாரி இருக்கலாம்.
• 3 மாதங்களுக்கான அவசர கால நிலைமையை நான் பிரகடனம் செய்கிறேன்.
• அவசரகால நிலைப் பிரகடனம் என்ற எமது தீர்மானத்தை விமர்சிக்க ஐரோப்பாவுக்கு எத்தகுதியும் கிடையாது.
• துருக்கியின் தலைவர் என்றவகையிலும் இராணுவத்தின் பொதுத்தளபதி என்ற வகையிலும் புரட்சியாளர்கள் எனும் கிருமிகளிலிருந்து ஆயுதப்படையை சுத்தப்படுத்துவோம்.
• அவசரகால நிலைப் பிரகடனத்தின் நோக்கம் ஜனநாயகத்திற்கு எதிரான அபாயங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான எட்டுக்களை எடுத்து வைப்பதாகும்.
• ஸீஸி ஒரு சதிப்புரட்சியாளன். தனது ஆயிரக்கணக்கான மக்களை கொலைசெய்த கொலைகாரன். அஸத் 6 இலட்சம் சிரியர்களை கொன்ற கொலைகாரன்.
• அவசரகால நிலைமைப் பிரகடனும் சட்டத்தின், சுதந்திரத்தின் ஆட்சியுடன் முரண்படாது.

By

Related Post