தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மீளாய்வு செய்யப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பற்றிய விபரங்ளை வர்த்தமானியில் அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சில தொகுதிகள் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக, உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அசோக பீரிஸ் தலைமையில் குழுவொன்றை நிறுவியிருந்தார்.
எல்லை நிர்ணயம் தொடர்பில் அரசியல் கட்சிகள், மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் போன்றவற்றினால் செய்யப்பட்ட மேன்முறையீடுகள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தக் குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
மீள் நிர்ணயம் செய்யப்பட்ட தொகுதிகளின் வரைபடங்களை உருவாக்குதல் மற்றும் எல்லைகளை நிர்ணயத்தல் போன்றவற்றுக்காக அளவையாளர் திணைக்களத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
மீள் நிர்ணயம் குறித்த அறிக்கை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் அகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் எதிர்வரும் நாட்களில் ஒப்படைக்கப்பட உள்ளது.