தனிமனிதன் ஒருவரின் கடின உழைப்பால் உருவாகியுள்ள பெரு நிறுவனமே ஏசியன் ஜிப்சம் மோல்டிங் பிரைவட் லிமிடட். வவுனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் மன்சூர் ஆப்தீன் (மஹ்சூம் ஹாஜியார்), இந்த தொழில் நிறுவனத்தை வவுனியா, நான்காம் கட்டை. ஹிஜ்ரா புறத்தில் அமைத்துள்ளார்.
வவுனியாவின் வரலாற்றில் இவ்வாறான ஒரு முயற்சி அனைவராலும் பாராட்டப்படுகின்றது. இந்த நிறுவனத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் எம்பிக்களான கலந்தர் மஸ்தான், நவவி, மஹ்ரூப் மற்றும் கலாநிதி அனீஸ், செட்டிக்குள பிரதேச செயலாளர் பபாப ஜோன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினர். ‘
இந்த நிறுவனம் ஜிப்சம் சீலிங், இன்டீரியர் டெக்கர் ஜிப்சம் மோல்டிங் ஆகியவற்றைக் கொண்டு மாடி மனைகள், இல்லங்கள் ஆகியவற்றை ஆயிரத்துக்கு மேற்பட்ட வண்ணங்களைக்கொண்டு அழகுபடுத்துகின்றது.
இலங்கையில் கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், வவுனியா, திருகோணமலை, கல்முனை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் விற்பனை நிலையங்களும், காட்சி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.