Breaking
Wed. Dec 25th, 2024

பிறந்த உடனேயே கைவிடப்பட்ட ஆண் சிசுவொன்று அக்கரைப்பற்று சாகாமம் வடிகானுக்குள்ளிருந்து கண்டெ டுக்கப்பட்டுள்ளது.

தொப்புள் கொடியுடன் இந்த ஆண் சிசு வடிகானுக்குள் இருந்ததை பெண்ணொருவர் கண்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.நேற்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட் பட்ட சாகாம பிரதான வீதியின் அருகில் கோளாவில் பிரதேசத்தில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இச்சிசு மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலி ஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Post