Breaking
Mon. Dec 23rd, 2024

ஏறாவூரில் கடந்த 11.09.2016 அன்று தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாம் அறிந்ததே!

இதன்பின்னர் கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது முகநூலில் பதிவிட்ட அவரது உள்ளக் குமுறல்கள் எமது வாசகர்களுக்காக …

ஆறு மாத குழந்தையில் தந்தையை இழந்து தந்தையின் அரவனைப்புக்காய் ஏங்கியவள். பின் சகோதர பாசம் காத்துநின்றவள் எதுவும் கிட்டாது பெருமூச்சி விட்டவள்.. தாய் என்ற பாசத்தை மட்டுமே உணர்ந்து மனதுக்குள் புழுங்கிக்கொண்டவள். பாசத்துக்காய் ஏங்கிநின்றவள் என் தேவதை.

2008ல் நான் சந்தித்தேன் காதல் வசமானேன். அழகிய குரலில் இனிமையான வார்த்தைகள் என்னை இன்னும் ஊன்றச்செய்தது. வருவோறை வரவேற்பதில் நிகரில்லா அன்பு கொண்டவள் என்தேவதை.

என்மாமி இளம் வயதிலே ஒன்றறை வருடத்திலே தன்வாழ்வை பூர்த்தி செய்தவர். குடும்பப் பொருப்பை தானேந்தி கட்சிதமாய் வாழ்ந்துகாட்டியவர். மார்க்க வழிமுறையை தவராது பின்பற்றியவர். அதன் வழியில் தன்மகளையும் பக்குவப்படுத்தியவர். காருண்ணியத்துக்கு இவருக்கு நிகர் யாருமில்லை இக்கால சந்ததியினரிடையே. இருவருடைய தவிப்பும் எதிர்பார்ப்பையும் எதிர்கொண்ட நான் என் தேவதையை கைகோர்த்தது 10.10 2010.யில். அழகிய குடும்பம் அன்பின் ஆலயம்.

என் அன்புக்குட்டி வாழ்க்கையில் எதையெல்லாம் இழந்தாலோ அதையெல்லாம் அடைய உறுதுனையாய் இருந்து வந்தேன். தந்தையின் அரவனைப்பை இழந்தவளுக்கு பல நேரங்களில் தந்தையாகவும் இருந்து சீராட்டி தாளாட்டி அரவனைத்து தூங்கவும் செய்திருக்கிறேன். ஆசைப்பட்டதெல்லாம் உடன் கொடுத்து அன்பான தந்தையின் நினைவினை நான் மீட்டேன்.

சிறு சன்டை. சிறு போட்டி சிறு விளையாட்டு எனவும் சகோதரனின் அன்பையும் நான் கொடுத்தேன். இனைந்திருந்த காலங்களில் நன்பனாய் இருந்ததுவே அதிகம். சொந்த கதை சோகக்கதை அனைத்தையும் ஒன்றுவிடா சொல்லி திருப்தியுரும் நல்ல சினேகிதனாய் நானிருந்தேன். தன்பிள்ளையாய் நீராட்டி உடுப்புடுத்து நடைநடந்து அழுகு பார்த்த நினைவுகளே எனக்கதிகம். நல்ல கனவனாகவும் நானிருந்து நற்பெயர் பெற்றதுவே நான் பெற்ற பாக்கியம்.

நான் பெற்ற வரம் நீ என்பேன். ஆனால் அது மாறி எங்களுக்கு கிடைத்த பொக்கிஸம் நீங்கள் என்றுறைத்தவர்கள் என் மனைவியும் மாமியும். மாமிக்கு நல்ல மருமகன் மட்டுமல்ல நல்ல மகனாகவே இருந்துவந்தேன். அன்பின் முழுவடிவம் அள்ளிச்சொறிந்தார்கள் என் மீது.

ஆறு ஆண்டுகள் சென்றாலும். ஒவ்வோரு நாளும் புதுப்புது நாளாகவே கடந்தது எங்கள் வாழ்வு.குழந்தையில்லை என்ற உணர்வே இல்லாத திகட்டாத வாழ்வு எங்கள் வாழ்வு. வெளிநாட்டில் நானிருந்தாலும் உடல்மாத்திரமே அங்கிருந்தது சதா உணர்வுகளும் அவர்களையே வலம்வந்து கொண்டிருந்தது.

அவள் இயற்கையை ரசிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவள் அந்த ரசனைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு அவர்களுக்காக தன்னையும் அர்ப்பணித்தேன். வீடே உலகம் என்றிருந்த என் மாமியை வெளியுலகம் காட்டியதும் நானே. தாய்க்கு தலைமகனாய் இருந்து ஆருதல் அழித்தேன்.

நான்தான் உலகம் என்றிருந்தார்கள். சதா என்நாமமே உச்சரித்தார்கள். எது செய்வதென்றாலும் எங்கு செல்வதென்றாலும் மருமகனிடம் கேட்டாயா மருமகனிடம் கேட்டாயா என்றே என் திருப்தியை நாடி நின்றார்கள். மாஹீர் சொன்னார் மாஹீர் சொன்னார் என்று சதா மாஹீரென்றே புலம்பிய என் தேவதை. இவ்வாறு அழகிய கூடு எங்கள் வீடு. களைத்து விட்டார்கள் கயவர்கள்.

அழுகையைத்தவிர வேரெதுவும் தெரியவில்லை எனக்கு. கடைசி நேரத்தில் ஹஜ்ஜூப்பெருநாளைக்கு பெருநாள் தொழுகைக்கு செல்ல என்கைபட்ட அபாயா வேண்டுமென்று அடம் பிடிக்க அதையும் அவசரஅவசரமாக நண்பர் ஒருவரின் ஊடாக அனுப்பிவைத்தேன். அதுவும் ஜனாஸாவிற்குத்தான் வந்து சேர்ந்தது. எங்களது புனித உறவுக்கு வார்த்தைகளே இல்லை அப்படியொரு இன்பமயமான உறவு. இது பொருக்காததனாலோ தெரியவில்லை பறித்துவிட்டார்கள் கயவர்கள்.

ஒரு சிறு நகக்கீரல் விழுந்தால் கூட நாற்பது தடவை காட்டி வேதனைப்படுபவள் என் தேவதை இந்த பொல்லடியை எப்படி தாங்கினாலோ நானறியேன். சிறு எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காத மாமி. தேங்காய் சிரட்டையேனும் எறிப்பதென்றால் அதைப்பார்த்து பலதடவை தட்டி விட்டு எறிக்கும் கருணையின் குடியிருப்பு என் தாய் என் மாமி என்ன குற்றம் செய்தார் இக்காபீர்களுக்கு. சிதைத்துவிட்டார்களே. நாசகாரர்கள்.

என்ன செய்வதென்றாலும் எனக்கு செய்திருக்கலாமே என உலருகிறது என் உள்நெஞ்சு.

இந்த பேரிழப்பை தாங்க முடியாது என்வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்களே இந்த அநியாயக்காரர்கள் என அழுது புழம்புகின்ற வேளையில். பழியையும் என்மேல் சுமத்தி என்னை மேலும் வேதனைக்கு உட்படுத்தி சுகம் கன்ட சில சகோதரர்களும் நம்மில் இருக்கத்தான் செய்தனர்.

இது சோதனையா இல்ல தண்டனையா தன்னைத்தானே புலம்பினேன். பைத்தியம் வந்திடுமோ எனும் நிலைவரை புலம்பினேன். அச்சமயம் சில நப்பாசை நினைவுகளும் வந்தன என்னை நியாயப்படுத்த என் அன்பு தேவதை ஒரு நிமிடமேனும் இவ்வுலகுக்கு வந்து செல்ல மாட்டாலா அப்படி வந்தால் இவர்களின் நாக்கை பிடிங்கிக்கொண்டு சாகும் அளவுக்கு நாளு வார்த்தை பேசிருப்பாளே வரமாட்டாளா என ஏங்கி அழுத நிமிடங்களும் கரைந்து சென்றன.

எத்தனை வார்த்தைகள் எத்தனை கட்டுக்கதைகள். வசைகள். எப்படியெல்லாம் பேசி முடித்தது இந்த சமூகம். அவனுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கின்றது அவனுக்கும் மனசு என்ற ஒன்று இருக்கின்றது என்பதை சிறு அளவேனும் என்னத்தோன்றவில்லையே உங்களுக்கு. நரம்பில்லா நாவு எதை வேண்டுமானுலும் பேசிவிடலாம் என்றுதானே பேசினீர்கள். அல்லாஹ் போதுமானவன் ஒரு போதும் என்னைக்கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையே என்னுல் இருந்த பெரும் சக்தி. அல்லாஹு அக்பர் தொடர முடியவில்லை .

வார்த்தைகளை கண்ணீர் கறைக்கின்றது. அல்லாஹ் போதுமானவன் நான் எப்படி போனாலும் பரவாயில்லை எனது இரு கண்களும் என்னை விட்டு பிரிந்து விட்டார்கள் அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள். அல்ஹம்துலில்லாஹ்.

By

Related Post