Breaking
Sat. Jan 11th, 2025

அப்துல்லாஹ்

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நாளை (09) வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெறவுள்ளதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை தெரிவித்தார்.

ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 103 மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி தற்சமயம் க.பொ.த. உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கே மேற்படித் திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் நிதி கிடைக்கவுள்ளது.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி இவ் வைபவத்தில் கலந்து கொண்டு புலமைப் பரிசில் நிதியினை வழங்கி வைக்கவுள்ளார்.

Related Post