Breaking
Mon. Mar 17th, 2025

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பில்  12 வயதுச் சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வீதியைச் சேர்ந்த முஹம்மத் அஸ்லம் (வயது 12) என்ற மாணவனே கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட சிறுவன் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து சந்தேக நபரைத் ஏறாவூர் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Post