Breaking
Mon. Dec 30th, 2024

றியாஸ் ஆதம்

வடபுல அகதி மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் இனவாத அமைப்புக்களையும் அதனோடு தொடர்புடைய ஊடகங்களையும் கன்டித்தும் வடபுல மக்களின் விடுதலைக்காக போராடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதினை ஆதரித்தும் மாபெரும் மக்கள் பேரணி ஏறாவூர் பிரதேசத்தில் (15.05.2015) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அன்றைய தினம் ஜூம்ஆ தொழுகையினை தொடர்ந்து ஆரம்பமான மக்கள் பேரணி ஏறாவூர் முதலாம் குறிச்சி ஜூம்ஆ பள்ளிவாசலிருந்து ஏறாவூர் நகர சபை வரை சென்றது.

மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்ற கண்டனப் பேரணியில் ஏறாவூர் நலன்புரிச் சங்கம் இரும்பு வியாபாரிகள் சங்கம் பொது அமைப்புக்களுடன் பெருந்திரளான பொது மக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல் ஜெயினுத்தீன் அவர்களினால் ஏறாவூர் நகர சபை தலைவர் எம்.ஐ தஸ்லீமிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

ris.jpg2_.jpg4_ ris.jpg2_.jpg3_ ris.jpg2_ ris

Related Post