Breaking
Wed. Jan 8th, 2025
ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மருந்தகத்தினுள் கூரை வழியாக நுழைந்த மர்ம நபர்கள், 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 21 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை என்பவற்றை திருடிச் சென்றதாக முறையிடப்பட்டது. இக் கொள்ளைச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்தது.
மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு விசாரணைகளின் அடிப்படையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 23 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

By

Related Post