Breaking
Mon. Dec 23rd, 2024

நேற்று முன்தினம் 14.01.2017 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் ஹிதாயத் நகர் யுவதிகளுக்கு தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலியின்  இணைப்பாளர் லத்தீப் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஏறாவூர் பிரதேச செயலக உதவித் செயலாளர் திருமதி நபிஷா , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் (ஜோன் பாஸ்டர் ) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதி அமைச்சரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

15941046_1331716023556753_222915044707203374_n 15941364_1331716066890082_9023646216901869502_n 15941476_1331715970223425_5994679001851464732_n 15977029_1331716356890053_1359369395096642722_n 15977948_1331716000223422_2532058052185331189_n

By

Related Post