Breaking
Mon. Dec 23rd, 2024
சென்னையில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ப்பானங்களையும், இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பானங்களையும், குளிர்ச்சியான உணவுகளையும் தேடி செல்கிறோம்.
அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 850க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக்  கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.

சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள் ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடை யாது. உண்மையில் பால் அளவுக்கு ஏற்ப குடித்தால் கிட்னியில் கல் உருவாகுவதை தவிர்க்க முடியும்.

உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வாய்க்குள் நுழையாத பல நோய்களை பரிசாக அளித்து வருகின்றன. ஆண்டுதோறும் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் யுரோலாஜிஸ்ட் டாக்டர் சேகர் கூறுகையில், “சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். அதை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்தி விட லாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறை களில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது.

முன்பெல்லாம் சிறுநீரக கல் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆண் களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகை யவர்கள் கோடைக்காலத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பி லிருந்து தப்பிக்கலாம்.

இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கள் ஏற்படுவதை தடுக்க முடியும். தமிழகத்தை விட வடஇந்தியா பகுதிகளில் சிறுநீரக கல் பாதிப்பு அதிக மாக இருக்கிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்த பாதிப்பு இருக்கிறது” என்றார்.

– எஸ்.மகேஷ்

Related Post