Breaking
Tue. Nov 26th, 2024

நல்­லி­ணக்­கத்­தி­னூ­டாக தேசிய ஐக்­கி­யத்தை அதன் எல்லா அம்­சங்­களிலும் அடைந்து கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டிய சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இளைஞர் பரம்­ப­ரைக்கு புதிய திறன் அபி­வி­ருத்தி புதிய அறிவு தொழில் நுட்­பத்­துக்­கான வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொ­டுத்து அத­னூ­டாக தேச­மெங்கும் சுதந்­திர உணர்­வுக்கு உர­மூட்ட வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

நாட்டின் 67 ஆவது சுதந்­திர தின வாழ்த்துச் செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் ஜனா­தி­பதி செய­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

நாட்டில் ஒரு புதிய நல்­லாட்சி யுகம் உத­ய­மா­கி­யி­ருக்கும் இவ்­வே­ளையில் இந்த 67 ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்டம் விசேட முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது.

இது எமது தேசத்தின் சுதந்­திரம் மற்றும் சன­நா­யக உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்கு எமது மக்­களின் ஐக்­கி­யத்­திற்­கான புதி­யதோர் அர்ப்­ப­ணத்­துடன் மீண்டும் மேலெ­ழுந்து வரும் கால­னித்­துவ சக்­தி­களைத் தோற்­க­டித்து எதிர்­கா­லத்தை நோக்கி புதிய உத்­வே­கத்­துடன் முன்­னோக்கிச் செல்லும் சந்­தர்ப்­ப­மாகும்.

எமது நாடு பெற்­றுக்­கொண்ட சமா­தா­னத்தைப் பலப்­ப­டுத்தி அபி­வி­ருத்­தியை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு மக்­களின் தேவை­க­ளுக்கு அதி­கூ­டிய முக்­கி­யத்­து­வத்தை அளிக்கும் சமூக அர­சியல் பொரு­ளா­தாரக் கொள்­கைகள் அவ­சி­ய­மாகும். இது எமது நாட்டின் சகிப்புத் தன்மை மற்றும் புரிந்­து­ணர்வு பாரம்­ப­ரி­யங்கள் அடிப்­ப­டையில் அமைந்த நல்­லாட்சி சமூக நல­னோம்­புகை மற்றும் பொரு­ளா­தார முன்­னேற்றம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாகும்.

67 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நாம் வென்­றெ­டுத்த சுதந்­தி­ரத்தை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு எமது இளைஞர் பரம்­ப­ரைக்கு புதிய திறன் அபி­வி­ருத்தி புதிய அறிவு மற்றும் தொழில்­நுட்­பத்­திற்­கான வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொ­டுத்து அத­னூ­டாக எமது தேச­மெங்கும் சுதந்­திர உணர்­வுக்கு உர மூட்ட வேண்டும்.

இந்த சுதந்­திர தினக் கொண்­டாட்டம் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போரில் மிகப்­பெரும் தியா­கங்­களைச் செய்து எமது தேசத்தின் இறை­மை­யையும் ஆள்­புல எல்­லை­யையும் பாது­காத்த எமது பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு எமது நன்­றி­களைத் தெரி­விக்கும் சந்­தர்ப்­ப­மாகும். மேலும் கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக போரா­டிய எல்லா சமூ­கங்கள் சம­யங்கள் மற்றும் கருத்­தி­யல்­களைச் சார்ந்த மிகப்­பெரும் சுதந்­திரப் போரா­ளி­க­ளையும் நாம் இச்­சந்­தர்ப்­பத்தில் நினைவு கூர வேண்டும்.

மேலும் இது எமது தேசத்தில் பல நூற்­றாண்­டு­க­ளாக நிலவி வரும் தேசிய ஐக்­கி­யத்தை நினைவு கூரும் அதே நேரம் எல்­லோ­ருக்கும் அன்பு செலுத்­துதல் என்­ப­தற்­கேற்ப நல்­லி­ணக்­கத்­தி­னூ­டாக தேசிய ஐக்­கி­யத்தை அதன் எல்லா அம்­சங்­க­ளிலும் அடைந்து கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டிய சந்­தர்ப்­ப­மாகும்.

வெளி­நாட்டு உற­வு­களில் அணி சேரா கொள்­கைக்கு அர்ப்­ப­ணிப்­புடன் உள்ள நாம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் மிகுந்த நட்­பு­றவை எதிர்­பார்த்து சமா­தானம் ஸ்திரத்­தன்மை ஜன­நா­யகம் மற்றும் சுபீட்­சத்­திற்­கான எமது முன்­னேற்­றத்­திற்கு உதவும் சர்­வ­தேச உற­வு­க­ளுக்கும் நாம் அர்ப்­ப­ணத்­துடன் உள்ளோம்.

ஐக்­கியம் மற்றும் புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டை­யி­லான எமது தேசத்தின் முன்­னேற்றம் பௌதீக மற்றும் சமூகத் தடை­களைத் தாண்­டு­வது மட்­டு­மல்­லாது ஊழலை அதன் எல்லா வடி­வங்­க­ளி­லி­ருந்தும் ஒழித்­துக்­கட்­டு­வ­தையும் மக்­க­ளுக்கு அவர்­களின் தலை­வர்­களின் மூலம் உண்­மை­யான சேவை கிடைப்­பதை ஊக்­கு­விப்­ப­தையும் மையப்­ப­டுத்­திய நாட்­டுப்­பற்­றுக்கு அழைப்பு விடுக்­கி­றது.

நாம் சுதந்­தி­ர­மாக முன்னோக்கிப் பயணிக்கின்றோம் என்ற வகையில் இந்த தேசத்தின் வாரிசுகளான எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முழுமையான வெற்றிகளைக் கொண்டு வரும் வகையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதை உறுதி செய்வோம். நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம் சுதந்திரம் மற்றும் சுபீட்சத்திற்கான ஒரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதி மொழியில் நாம் இணைந்து கொள்வோம்.

Related Post