Breaking
Sat. Dec 21st, 2024

தீபாவளி தினத்தில் தீய எண்ணங்கள் விலகி, நாட்டுக்கு சபீட்சம் கிடைக்கட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இன்று தீபாவளியைக் கொண்டாடும் சகல தமிழ் சகோதரர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். நரகாசுரன் ஒழிக்கப்பட்ட இத்தினம், கெட்ட எண்ணங்கள் நிலைப்பதை எதிர்க்கிறது. மானிடப்பிறவிகள் மத்தியில், தீய எண்ணங்களை உருவாக்கும் எந்த சக்திகளும் நிலைக்காது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் இத்தினம் அமைந்துள்ளது. 

ஆலயங்கள் தோறும் இன்று தமிழ்ச் சகோதரர்கள் நன்மை நிலைக்கப் பிரார்த்திக்கின்றனர். அதேபோன்று, எமது நாட்டிலும் தீமைகள் விலகி, நன்மைகள் நிலைக்க, இந்நாளின் மகத்துவம் வழிகோலட்டும். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். இத்துன்பங்கள் நிரந்தரமாக நீங்கி அமைதி நிலைக்கட்டும்.

பொதுத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்தச் சூழலில், நமக்கான அமைதித் தீர்வுகளுக்கு நாமே வழிசமைக்க வேண்டும்.

நல்லதொரு அரசியல் கலாசாரம் பிறக்கவும் தமிழ் மக்கள் இந்நாளில் பிரார்த்திப்பது அவசியம். சகல இனங்களும் ஐக்கியப்படும் அரசியல் சித்தாந்தம் நிலைத்தாலே, இந்நாட்டில் அதர்மங்கள் அழியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post