1946ம் ஆண்டு செப்டம்பர் 06ம் திகதி முன்னாள் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தார்.
அன்றைய அரசியல் மற்றும் நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் சிங்கள மகா சபை என்பன இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தன.
இலங்கை தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய சேனநாயக்க தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் நிலைத்திருக்க, சிங்கள மகாசபையின் தலைவர் பண்டாரநாயக்க பின்னாளில் இக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாளைய தினம் இரவு முழுவதும் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் வைபவம் ஒன்று நடைபெறவுள்ளது.