Breaking
Thu. Dec 26th, 2024

ஐக்கிய தேசியக் கட்சியின் எப் (APP) இன்று (23) கட்சி தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்போது கட்சி உறுப்பினர்களுக்கு புதிய இணைய அங்கத்துவ அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டிற்கு எப்பொழுதும் புதிய திட்டங்களை ஐ.தே.கட்சியே கொண்டு வந்துள்ளது.

இது மகாவளி திட்டம் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் தாமே முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் முதன் முறையாக ஒரு கட்சி தன்னுடைய எப் (APP) ஐ வெளியிடுவது இதுவே முதல் தடவை எனவும் குறிப்பிட்டார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 92 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவத்தை பெற விரும்புபவர்கள் இந்த அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post