எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் ஆதரவு வழங்கவுள்ள அமைப்புகளின் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஐக்கிய தேசிய கட்சி பரந்த கூட்டணியாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும். எனினும் யானை சின்னத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாதென பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சின்னமாக யானையை பயன்படுத்துமாறு கட்சிக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அனைத்திடமும் கோரிக்கை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது 2001ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்ட முறை, தொகுதி முறை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனு வழங்குவது இன்று மற்றும் 13ஆம் திகதிகளில் இடம் பெறும் என அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு நாளை கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளதோடு, பிரச்சார பேரணி 14ஆம் திகதி கண்டியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் மக்களுக்கு வழங்கும் நிவாரணம் தொடர்பிலான யோசனைகள் கட்சி மாநாட்டில் முன்வைக்க தீர்மானிக்கப்படவுள்ளதோடு, தேர்தல் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தேர்தல் நடத்தும் முறை தொடர்பில் கட்சியாளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.