ஜனாதிபதி பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உறுதியாக அறிவிக்கும் பட்சத்தில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாட தயார் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்புடன் கலந்துரையாட தயார் என ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இனத்தை நோக்காக கொண்ட அரசியல் கட்சிகள் நாட்டினுள் இருப்பதன் காரணமாக, சிங்கள பௌத்த மக்களுக்காக சிங்கள கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.