ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல என அந்நாட்டின் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விலக போவதாக அறிவித்த பின்னர் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய அண்டை நாடுகளோடு வலிமையான சாத்தியமான பொருளாதார பிணைப்பை பிரிட்டன் உருவாக்க வேண்டும் என்று கெமரூன் தெரிவித்துள்ளார்.
இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படாது எனவும் பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.