ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால் உள்ளூரில் மீன்களின் கையிருப்பு குறைவாக இருப்பதால், இந்த தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக் தொன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மீன் ஏற்றுமதி நிறுவனங்களால் 1000 மெட்ரிக் தொன் மீன்கள் கோரப்பட்ட போதும், குறைந்தளவு மீன்களே விநியோகிக்கப்படுவதால், அந்த நிறுவனங்களின் கேள்விப் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.