இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில். முழுமையாக உள்நாட்டு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1931ஆம் ஆண்டு முதல் இலங்கை, ஜனநாயக வரம்புகளை பின்பற்றி வருகிறது. இதன் அடிப்படையிலேயே தேர்தல்களும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் உள்நாட்டு தேர்தல் ஒன்றில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தலையீடு தேவையற்றது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ள அறிக்கை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கிளை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜனாதிபதி தேர்தல் வெளிப்படையாக அமைதியாக இடம்பெறவேண்டும்.
அத்துடன், இலங்கை மக்கள் தமது பிரதிநிதியை பயமின்றி தெரிவு செய்ய உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்தமை தொடர்பிலேயே இலங்கை வெளியுறவு அமைச்சு தமது எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.