Breaking
Wed. Nov 20th, 2024

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் எதிரான தடை நீக்கம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் சட்டரீதியான தீர்ப்பாகும். இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான தீர்மானமல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது இலங்கை அரசாங்கம் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்காத நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையானது அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பு என்பதால் அதனை எமது அரசாங்கம் விமர்சிக்கவில்லை. மாறாக கவலை தெரிவித்தது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் புலிகள் மீதான தடை நீக்கம் அரசியல் தீர்மானம் அல்ல என்று கூறி ஐரோப்பிய ஒன்றியம் தன்னிச்சையாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளமையானது தற்போது இது அரசியல் தீர்மானமா என்ற சந்தேகத்தை எம்மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

காரணம் இலங்கை அரசாங்கம் இந்த நீதிமன்றத் தீர்மானத்தை விமர்சிக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தன்னிச்சைாக இது அரசியல் தீர்மானம் அல்ல என்று தெரிவித்துள்ளமையானது பல சந்தேகங்களுக்கு வழி வகுக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியையும் அதன் தலைவரையும் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு செய்கின்றதா? என்ற நியாயமான சந்தேகமும் எழுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post