கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்சத சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று வாய்மூல கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நிலைமை தொடராதிருப்பதற்காக ராஜதந்திர மட்ட செயற்பாடுகளை சக்திமயப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் சில தரப்பினர் இனவாதத்தை தவிர வேறு எதனையும் வைத்து அரசியல் நடத்த முடியாதநிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.
அவர்களால் நாட்டின் ஜனநாயகம் குறித்தோ? ஊழல் குறித்தோ? சட்டங்கள் குறித்தோ? ஏனைய விடயங்கள் குறித்தோ விவாதிக்க முடிவதில்லை
இதனால் இனவாதத்தை வைத்து மாத்திரம் அவர்கள் அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிப்பதாக அனுரகுமார திசாநயக்க தெரிவித்துள்ளார்.