Breaking
Fri. Nov 15th, 2024
Energy Minister Andrea Leadsom speaks during the "The ITV Referendum Debate" at the London Television Centre in Britain, June 9, 2016. Mandatory Credit: Photo by Matt Frost/ITV/REX/Shutterstock via Reuters

ஐரோப்பிய யூனியனில் இருந்து எதிர்வரும் ஆண்டுக்குள் பிரிட்டன் விலகி விடும் என அந்நாட்டின் பிரதமர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள ஆன்டிரியா லீட்சோம் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக கடந்தமாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 இலட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 இலட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து நீடிப்பதையே பிரிட்டன் நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் விரும்பினார். ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று கூறியிருந்த அவர், அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

வாக்கெடுப்பின் முடிவு அவரது விருப்பத்துக்கு மாறாக அமைந்துள்ளதால், வரும் ஒக்டோபர் மாதத்துடன் முடிவடையும் டேவிட் கேமரூனின் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்தார். தனது இராஜினாமா முடிவை அறிவித்தபின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ‘மக்களின் கருத்தாக எதிரொலித்த விலகல் முடிவு செயலளவிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

நமது நாடு என்னும் கப்பலை எதிர்காலத்தின் அடுத்தபடியை நோக்கி வழிசெலுத்தும் மாலுமியாக நான் நீடிப்பது சரியாக இருக்காது என்பதால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளேன்.

எனவே வரும் ஒக்டோபர் மாதம் இந்த நாட்டின் புதிய பிரதமராக வேறொருவர் பதவி ஏற்றுக் கொள்வார்’ என கண்கலங்கிய நிலையில் கேமரூன் அறிவித்தார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இதர நடவடிக்கைகளை ‘புதிய தலைமை’ மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமர் பதவிக்கு பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்நாட்டின் எரிசக்தி துறையின் அமைச்சராக பதவி வகித்துவரும் ஆன்டிரியா லீட்சோம்(53) என்ற பெண்மணி, வரும் தேர்தலில் பிரதமர் பதவியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

’நான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றால் முன்னாள் பெண் பிரதமரான மார்கரெட் தாட்சரைப் போல் திறமையான அரசு நிர்வாகத்தை மக்களுக்கு அளிப்பேன்’ என இவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே, ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் உடனடியாக விலகியாக வேண்டும் என அதன் உறுப்பு நாடுகள் வலியுறுத்த தொடங்கியுள்ளன, இந்நிலையில், இன்றைய ‘சன்டே டெலிகிராப்’ பத்திரிகைக்கு சிறப்பு பேட்டியளித்துள்ள ஆன்டிரியா லீட்சோம், ’ஐரோப்பிய யூனியனில் இருந்து அடுத்த ஆண்டுக்குள் பிரிட்டன் விலகி விடும்’ என உறுதியளித்துள்ளார்.

By

Related Post