பொது வாக்கெடுப்பு நடத்தி வெளியேறிய பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து மற்ற நாடுகளை விட அதிக உரிமைகள் எதிர்பார்க்கக் கூடாது என்று பிரிட்டனுக்கு இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக அதிகப்படியான மக்கள் வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து முறைப்படி வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக கடந்த ஜூன் மாதத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்திய பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனை இத்தாலி பிரதமர் மட்டியோ ரென்ஸி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் ரென்ஸி கூறியதாவது:-
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு வாக்களிக்கப்பட்டது ஒரு மோசமான முடிவு. இருப்பினும் மக்கள் முடிவு மதிக்கப்பட வேண்டும்.
பொதுவாக்கெடுப்பு நடத்தி வெளியேறிய பின் ஐரோப்பியன் யூனியனில் இருந்து மற்ற நாடுகளை விட அதிக உரிமைகளை கண்டிப்பாக எதிர்பார்க்கக் கூடாது.
கன்சர்வேடிவ் கட்சிக்குள் உள்ள உள்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்த டேவிட் கேமரூன் முடிவெடுத்தது தான் பிரச்சனை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.