Breaking
Sun. Jan 5th, 2025

புத்தளம் நகரின் முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம். முன்பள்ளியின் 44 வது வருட நிறைவோடு கூடிய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி சிறுவர் தினமான கடந்த சனிக்கிழமை (01) மாலை புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டற் விழாவை ஆரம்பித்து வைத்ததுடன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி சிறப்பித்தார்.

புத்தளம் நகரில் முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அனைத்து மழலை செல்வங்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கி, கிண்ணங்கள் வழங்கப்பட்டு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

14440878_1814280778856472_2022986617637796856_n 14446028_1814279728856577_8093120364035069755_n 14570354_1814280135523203_4806890993402679690_n 14446080_1814279848856565_4321835425514620442_n

By

Related Post