ஐ.எஸ். படையில் சேர உலகின் பல நாடுகளில் இருந்து வெளியேறும் வாலிபர்கள் சிரியா அல்லது ஈராக்குக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகையில், இங்கிலாந்தில் இருந்து மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் சிரியா மற்றும் ஈராக்குக்கு சென்று ஐ.எஸ் படையில் சேர்ந்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த சித்தார்த் தார்(31) என்பவர் சமீபத்தில் முஸ்லீமாக மதம் மாறினார். பின்னர், அபு ருமய்ஸா என தனது பெயரை மாற்றிக் கொண்ட இவர் கடந்த செப்டம்பர் மாதம் இவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமினில் விடுதலையான ருமய்ஸா, லண்டனில் இருந்து பஸ் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்று, ஐ.எஸ் குழுவுடன் இணைந்து விட்டதாக லண்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-Malai Malar-