Breaking
Wed. Dec 25th, 2024

ஐ.எஸ். போன்ற மைப்பின் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் யாராவது சம்பந்தப்படுவதாக தெரியவந்தால் அவர்களுக்கு உயர்ந்த பட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

ஐ.எஸ். களின் 2020 வரைபடத்தில் இலங்கையும் உட்பட்டுள்ளமை குறித்து சிங்கள ஊடகமொன்று அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பயங்கரவாத அமைப்புக்களுக்கு இளைஞர்களை இழுத்துக் கொள்வது இலகுவானது. எல்.ரி.ரி.ஈ. அமைப்பானாலும், ஐ.எஸ்.போன்ற பயங்கரவாத அமைப்பானாலும் இவ்வாறே செயற்படுகின்றனர்.

இந்த பயங்கரவாத அமைப்புக்களும் இளைஞர்களை இலக்குவைத்தே செயற்படுகின்றது. இளைஞர்களிடம் இவர்களைப் பற்றியுள்ள சிந்தனை மாற்றப்படல் வேண்டும். இதற்காக வேண்டி இலங்கையிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஒவ்வொரு பள்ளிவாயல் ஊடாகவும் இந்த பயங்கரவாத அமைப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பள்ளியில் ஒன்று கூடுகின்றனர். இதன்போது, அரை மணி நேரம் அவர்கள் கட்டாயம் ஒரு உபதேசத்துக்கு செவிமடுத்தே ஆக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இப் பயங்கரவாத அமைப்பு குறித்த தெளிவை வழங்க ஜம்இய்யத்துல் உலமா நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். D c

Related Post