Breaking
Sun. Dec 22nd, 2024

பாரிஸ் தாக்குதலில் பலியான 129 பேருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். அமைப்பின் செயலைக் கண்டித்தும் உலகின் பல மூலைகளில் வசிப்போரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.எஸ்.களை எதிர்த்து போரிடப் போவதாக ‘அனானிமஸ்’ என்ற பெயரில் பெயரை வெளியிடாமல் செயல்பட்டுவரும் இணையப் போராளிகள் மற்றும் ஹேக்கர்களின் குழு யூடியூப் வீடியோவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பல மூலைகளிலும் செயல்பட்டுவரும் இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினர் முகத்தில் ‘கய் ஃபாக்ஸ்’ முகமூடியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘உங்களுக்கு எதிரான மாபெரும் போரில் இறங்கப்போகின்றோம். முடிந்தால் உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்’ என ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இந்த குழுவினர் சவால் விடுத்துள்ளனர்.

மேலும், இந்தப் போர் ஆயுதம் ஏந்திய போராக இருக்காது எனவும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் அத்தனை இணையதளங்களும் முடக்கப்படும். அப்பாவிமக்களைக் கொன்று குவித்து, அமைதியான மார்க்கத்தை உருவாக்குகின்றோம் என தெரிவிக்கும் நீங்கள் உங்களது மார்க்கத்தின் மீது உண்மையான மதிப்பையோ, நம்பிக்கையையோ வைக்கவில்லை’  எனவும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் இணைய தொடர்புகளையும், கணக்குகளையும் தகர்த்தெறிவதே தங்களது முதல் நடவடிக்கையாக இருக்கும் என இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினர் தமது வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

முதலில், பிரெஞ்சு மொழியில் வெளிவந்த இந்த வீடியோ மற்ற மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினரின் ஆங்கில எச்சரிக்கை வீடியோ உங்கள் பார்வைக்கு:

By

Related Post