Breaking
Mon. Dec 23rd, 2024
ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்து நாட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 224 பேரும் பலியானார்கள்.
இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களில், ‘ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள் பகிரங்கமாக தெரிவித்ததோடு அதற்கான வீடியோவையும் வெளியிட்டனர்.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியை தொடர்ந்து, ரஷ்ய புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டனர்.
அதில், உலகம் முழுவதும் உள்ள ரஷ்ய நாட்டு குடிமக்களை காப்பது ரஷ்யா நாட்டின் தலையாய கடமை என்பதால், அதனை சீர்குழைக்கம் முயலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ரஷ்யாவின் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் படைப்பிரிவினர் ரஷ்ய எல்லைகள் மற்றும் பல முக்கிய இடங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
மேலும், இந்த எல்லைகளில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், சிரியா, ஈராக் மற்றும் அரபு நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ரஷ்ய ராணுவம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பாக, ரஷ்ய ராணுவம் நேட்டோ (NATO) அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளது. அப்போது, ஜியார்ஜியா மற்றும் உக்ரைன் பகுதிகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு நடத்தினால் நேட்டோவிடமிருந்து எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்றும் உறுதி அளித்துள்ளது.
மேலும், அணுகுண்டு தாக்குதல் தொடர்பாக சிரியா அரசாங்கம் மற்றும் அதன் கூட்டணி பிரிவினருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ள்தாகவும், அவர்கள் மூலம் அங்குள்ள குர்து மற்றும் பிற பிரிவினரை பொதுமக்களை வெளியேற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ரஷ்யாவின் அணுகுண்டு தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post