Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார்.

இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார்.

சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற யாப்பில் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post