Breaking
Mon. Dec 23rd, 2024
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் மூலம் பல நெருக்கடிகளை ஐக்கிய தேசிய கட்சிய எதிர்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா தொடர்பில் ஐ.தே.கவின் முடிவு பிரச்சினைக்குரிய ஒன்றாகும்.  இந்தப் பதவியை வழங்குவதற்கு இன்னும் எவ்வளவோ தகுதியானவர்கள் உள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியதனால், அதிகம் நெருக்கடிகளை சந்திக்கப்போவது ஐக்கிய தேசியக் கட்சிதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் யாராவது அதற்கு எதிராக குரல் கொடுத்தால், உறுப்புரிமை தொடர்பில் சட்டப் பிரச்சினை தோன்றுவதற்கு இடமுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post