Breaking
Sat. Nov 16th, 2024

-முபாரக் அப்துல்  மஜீத்-

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாடம் படிப்பிப்போம் என் ரஊப் ஹக்கீம் அண்மைக்காலமாக வீறாப்பு பேசுவது அவரது வழமையான நடிப்பு என்பதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் உசுப்பேற்றி சொந்த பிழைப்பு நடத்தும் நடவடிக்கையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,

ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றை பார்க்கும் போது அவர் எப்போதும் ஐ.தே.கவின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறார் என்பது சகலரும் அறிந்த விடயம். ஆனாலும் அரசாங்கத்துள் எதும் உள்வீட்டுப் பிரச்சனைகள் வரும் போது, தாம் அரசை எதிர்க்கப்போவதாக சூழுரைப்பதும், பின்னர் கிடைப்பதை பெற்றுக் கொண்டு அடங்கி விடுவதும் ஹக்கமின் வழமையான நடவடிக்கையாகும்.

ஐ தே க அண்மைக்காலமாக தமக்கு துரோகம் செய்து விட்டது என ஹக்கீம் சொல்வது சிறுபிள்ளைத்தனமானதாகும். ஐ தே க எப்படிப்பட்ட கட்சி என்று தெரிந்து கொண்டே அதனுடன் சங்கமித்துக்கொண்டு, கடந்த உள்ளுராட்சி தேர்தலில் யானையை எம்மோடு கட்டிப்போடுவதற்காகவே யானையுடன் சேர்ந்து போட்டியிடுவதாக மக்களை ஏமாற்றியவர், இப்போது அதே யானை பின் காலால் உதைத்து விட்டது என்று கூறுவது, குழி என்று தெரிந்து கொண்டே அதனுள் விழுந்து விட்டு “அய்யகோ விழுந்து விட்டேனே!” என புலம்பும் முட்டாளின் கருத்து போன்றதாகும். இது போன்றுதான் மஹிந்த காலத்தில் அளுத்கம சம்பவத்தின் பின் அரசுக்கு பாடம் படிப்பிப்போம் என கர்ஜித்து விட்டு பின்னர் பதிவியை தக்க வைப்பதற்காக அரசை வீழ்த்த துணை போக மாட்டோம் என அடங்கிப்போனார்.

இன்று ஐ தே தலைவர் பிரதமர் மீது முஸ்லிம் சமூகம் பாரிய வெறுப்பில் இருக்கிறது என்பது உண்மை. இந்த நிலையை சமாளித்து முஸ்லிம்களை மடையர்களாக்க பேசும் வார்த்தைகளாகவே ஹக்கீமின் வார்த்தைகளை பார்க்க வேண்டியுள்ளது. இது போன்ற வார்த்தைகளை ஹக்கீமிடமிருந்து அடிக்கடி கேட்டு எமக்கு புளித்து விட்டது. ஆனாலும் ஹக்கீமின் மடத்தனங்களினால் முஸ்லிம் சமூகமே பாதிப்புக்குள்ளாகிறது என்பதனாலலேயே இவற்றை நாம் பேச வேண்டியுள்ளது.

இவ்வாறு ஹக்கீம் ஐ தே கவுக்கு எதிராக இப்போது பேசினாலும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது நிச்சயம் ரணிலுக்கே ஆதரவளிப்பார் என்பதை எம்மால் 100 சத வீதம் உறுதி கூற முடியும். ஐ தே க அரசை பகைத்துக்கொண்டதாக ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் இதுவரை பதியப்படவில்லை, இனியும் பதியப்படாது என்பதே உண்மையாகும்.

ஆகவே, ரணிலை ஆதரிப்பது ஆதரிக்காமல் விடுவது ஹக்கீமின் சொந்த விருப்பமும் தேவையுமாகும். அதற்காக முஸ்லிம் மக்களை உசுப்பேத்தி உசார் மடையர்களாக்கும் முயற்சியை கண்டிக்கிறோம். இப்படியான வார்த்தைகளால்தான் முஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள் என்று பேரின மக்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு ஐ தே க மீது அதிருப்தி இருந்தால் வாயை மூடிக்கொண்டிருந்து, நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணிலை எதிர்த்து வாக்களியுங்கள். உங்களின் சொந்த நலன்களுக்காக தொடந்தும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாக்க வேண்டாம் என்று உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Related Post