Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது.

இந்த நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரையில் ஐக்கிய தேசியக் கட்சியானது மிதவாத கொள்கைகளைப் பின் பற்றி பல தடவைகள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பங்காளிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டு நிறைவு நிகழ்வினை முன்னிட்டு பல்வேறு மத வழிபாட்டு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதி கெம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

By

Related Post